உலகம் முழுவதும் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு முட்டை. ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் முட்டை பலரால் விரும்பப்படுகிறது.
ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
சர்க்கரை
முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும். இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும்
சோயா பால்
காலை நேரத்தில் முட்டையும், சோயா பாலையும் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது, முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துமாம்.
வாத்து இறைச்சி
முட்டை சாப்பிட்டபின் வாத்து இறைச்சி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் கொண்டது. முட்டையில் புரதமும், குளிர்ச்சி பண்புகளும் உள்ளது. ஒரே குணமுடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருந்து கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நமது உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒரே உணவில் சேர்ப்பது சரியாகாது.
பெர்சிமோன்
முட்டை சாப்பிட்ட பிறகு பெர்சிமோன் பழத்தை சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு இணையானது. குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கு ஆளாக நேரிடும் என்பதை மறவாதீர்கள்.