மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட நாளிலிருந்து மூன்றாவது வாரம் இதுவாகும். இதுவரையிலும் சமூகத்திற்குள் கொரோனா பரவவில்லை என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை ஊடாக ஏற்பட்ட கொரோனா கொத்தணி காரணமாக அந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பத்திலேயே கூறப்பட்டது. எனினும் தனிமைப்படுத்தப்பட்ட முதலாவது தரப்பினர் வழங்கிய தகவலுக்கமைய கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தகவல் வழங்காதவர்கள் இருப்பின் அவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதா இல்லையா என்பது இந்த வாரத்திற்குள் கண்டுபிடித்துவிட முடியும். எனவே இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.