செங்கல்பட்டு அருகே 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மேலச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பெண்மணி தனது 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு சென்ற கார்த்திக், தான் ஆன்லைன் வகுப்பு எடுத்து வருவதாகவும், மகனை ஆன்லைன் வகுப்புக்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து 9ஆம் வகுப்பு பயிலும் மகனை ஆன்லைன் வகுப்புக்கு பெண்மணி அனுப்பி வைத்துள்ளார். அப்போது ஆசிரியர் கார்த்திக், மாணவனை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆசிரியர் கார்த்திக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.