இந்தியாவில் இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக ஆற்றில் மிதந்து வந்ததைக் கண்டு அந்த ஊர் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்வி குறி ஆகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாமல் இருப்பது, அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, ஜாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர், அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
காதலித்த நாட்களில் இருவருமே ஹோட்டல், சினிமா, பார்க் என்று பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் மகளை கண்டித்துள்ளதுடன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறியவுடன், அந்த பெண்ணும் தன்னுடைய காதலை கைவிட முடிவெடுத்து, காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
ஆனால், காதலனோ, அந்த பெண்ணை பார்க்க முடியாமல், பேசமுடியாமல் தவித்து வந்துள்ளார். பல முறை போன் செய்தும், காதலி போன் எடுக்காத காரணத்தினால், ஆத்திரமடைந்த காதலன், தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அந்த பெண்ணை கடத்தியுள்ளார்.
அதன் பின், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வைத்து, காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கியதுடன், அவரும் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், ஆபத்து என்பதால், அவர்கள் அனைவரும், பெண்ணை கொலை செய்து சடலத்தை அருகில் இருக்கும் கால்வாயில் தூக்கிவீசிவிட்டு சென்றுள்ளனர்.
கால்வாயில் நீர் நிறைந்து காணப்படுவதால், நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தபடியே வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சியடைந்து, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதபரிசோதனை அறிக்கையில், குறித்த பெண் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததால், பொலிசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த நபர்களை கைது செய்து, அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாலும், குற்றங்கள் மிகுந்து வருவதாலும் யோகி அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.