கொழும்பு பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய நபர் ஒருவர் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை இடையே மரணமடைந்ததுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் கந்தக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய மீன் விற்பனை லொரியை செலுத்தும் சாரதி என்று தெரியவருகிறது.
பேலியகொட மீன் சந்தையில் இருந்த சுமார் 4 பேருக்கு கல்பிட்டிய வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனைக்கு வந்திருந்த குறித்த நபர் திடீரென ஏற்பட்ட சுவாச நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.