மட்டக்களப்பு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுப் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.