ரத்த சர்க்கரை அளவை குறைவாக வைக்க வேண்டும் என்று விரும்பும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய பக்கவிளைவுகள் இல்லாத மூலிகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
கற்றாழை
கற்றாழை என்பது பலவிதமான பயன்பாடுகளை கொண்டிருக்கும் தாவரம் ஆகும். இது சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யும் சிறந்த பொருள்.
இது உடல் ஆரோக்கியத்திலும் தொடர்பு கொண்டுள்ளது. பெண்களுக்கு உண்டாகும் அந்தரங்க நோய்களை குணப்படுத்த உதவுவது போன்று இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஆபத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.
கற்றாழையின் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற பகுதியை நன்றாக கழுவி மென்மையாக ஜூஸாக்கி சாப்பிடலாம். மூன்று நாளுக்கு அல்லது வாரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி கற்றாழை கலந்து எடுத்துகொள்ளலாம்.
பாகற்காய்
நீரிழிவுக்கு கசப்பான பழங்கள் எப்போதும் பயனளிக்கும் என்பதற்கு சான்றுகள் உண்டு. சில இடங்களில் மக்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க தாவரத்தின் பகுதியை பயன்படுத்தியதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பாகற்காய் சாறு குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவையில்லை என்னும் தவறான தகவல்களை மக்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எடுத்துகொள்ளும் போது சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு மேல் அதிகமாக எடுக்கவும் கூடாது. தினமும் 2 டீஸ்பூன் அளவு எடுக்கலாம். அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை எடுக்கலாம்.
எனினும் தொடர்ந்து உங்களின் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். இவையெல்லாம் கடினமாக இருந்தால் பாகற்காயை வெங்காயம் தக்காளி சேர்த்து பொரியலாக்கி அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இவை பாகற்காய் சாறு போன்று திடீரென்று ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காது.
வெந்தய விதைகள்
வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் முக்கியமான பொருள். வெந்தயத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையின் செரிமானத்தை குறைக்க உதவும் இழைகள் மற்றும் ரசாயனங்கள் உள்ளது. இதை அவ்வபோது உணவில் சேர்த்து வந்தால் இது டைப் 2 நீரிழிவை தடுத்துவிடும் அற்புத குணங்களை கொண்டது, நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் இவை உதவக்கூடும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வெந்தயத்தை தூளாக்கி காலை வேளையில் வெதுவெதுப்பான நீரில் கால் டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் அளவு வெந்தயத்தை சேர்க்கலாம். நீங்கள் சர்க்கரையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருந்தால் கண்டிப்பாக அவ்வபோது சர்க்கரைஅளவை பரிசோதிக்க வேண்டும். அல்லது வெந்தயத்தை முளைகட்டி வைத்து தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடலாம். நிச்சயம் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இஞ்சி
இஞ்சி சிறந்த மூலிகை. செரிமான அழற்சி பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் சிறந்த தீர்வாக இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு இஞ்சி சர்க்கரை நோய்க்கு மருந்தாக இருக்கும் என்று ஆய்வு பரிந்துரை செய்தது. எனினும் இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைந்தது. எனினும் இன்சுலின் அளவை குறைக்கவில்லை. டைப் 2 நீரிழிவு நோய்க்கு இஞ்சி இன்சுலின் எதிர்ப்பை குறைக்கலாம். எனினும் இது குறித்த ஆய்வுகள் மேலும் தேவைப்படுகிறது.
அதே நேரம் இஞ்சியை அடிக்கடி தேநீரில் சேர்த்து எடுக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி தேநீரில் சேர்த்து குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை
மசாலா பொருள் தான் என்று அலட்சியம் செய்துவிட முடியாது. இயற்கையான இனிப்பை கொண்டுள்ள மணமுள்ள பொருள். இந்த இனிப்புக்காக இதை எடுத்துகொள்ள வேண்டியதில்லை. இது வேறுபல நன்மைகளையும் வழங்ககூடும். குளுக்கோஸ் இன்சுலின் மற்றும் இன்சுலின் உணர்திறன், ரத்தத்தில் கொழுப்பு , ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு இவை சிறந்த தீர்வளிக்கும்.
நீரிழிவு இருப்பவர்களுக்கு லிப்பிடுகள், கொழுப்புகள் இன்சுலின் உணர்திறன் அனைத்துமே முக்கியமான குறிப்பான்கள் ஆகும். எனினும் இது குறித்த ஆய்வுக்கு ஆய்வுகள் பயன்படுத்தப்படவில்லை. அதனால் இலவங்கப்பட்டைபயன்பாடு குறித்த ஆய்வுகள் மேலும் தேவை.
அதே நேரம் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளிலிருந்து மீட்கும். இலவங்கப்பட்டையை தனியாக எடுக்க வேண்டியதில்லை. டீயில் இலவங்கப்பட்டை தூளை சேர்க்கலாம். உணவில் அதிகம் சேர்க்கலாம்.
குறிப்பு
சர்க்கரை நோய்க்கு உதவும் மூலிகைகள் குறித்து சமீபத்திய ஆண்டுகளில் பல மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மூலிகைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடனான தொடர்பை காட்டுகிறது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவான இந்த பொருள்களில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை உணவாக சேர்த்து எடுத்துகொள்ளும் போது ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் இடைவேளையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அல்லது உங்கள் நீரிழிவு மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவதும் பாதுகாப்பானது. அதே நேரம் இதை பயன்படுத்தும் போது சர்க்கரை நோய்க்கான மாத்திரையை தவிர்க்கவும் கூடாது.