தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகள் இல்லாமையால் மருத்துவமனை தேவைக்கு பயன்படுத்தும் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமே தென் பகுதியில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
இதனால் உள்ளூர் மருத்துவ தேவைக்கு அம்பியூலன்ஸ் வண்டி இல்லாத நிலைமை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான தனிமைப்படுத்தல் முகாம்கள் காணப்படுகின்றன. இவற்றில் தெற்கில் இருந்து பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் கொரோன தொற்று இனம் காணப்பட்டவர்களை தெற்கில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகள் இல்லாத நிலையினால் மருத்துவமனை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் அம்பியூலன்ஸ் வண்டியியே பயன்படுத்தப்படுவதால் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளது.
எனவே கொரோனா தொற்றாளர்களை இடமாற்றுவதற்கு என தனியான அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.