அமெரிக்கா – பிலடெல்பியாவில் கறுப்பின இளைஞன் ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்துள்ள நிலையில், அதனை கண்டித்து இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனால் பிலடெல்பியா நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி கத்தியுடன் சுற்றி திரிந்த, மனநலம் குன்றியதாக கூறப்படும் – வால்டர் வாலஸ் என்ற கறுப்பின இளைஞன் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இவரது மரணத்துக்கு நீதி கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறை காரணமாக கடைகள் சூறையாடப்பட்டுள்ளதுடன், நகரில் பதற்ற நிலையும் உருவாகியுள்ளது.