விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.10 மணியளவில் கதிர்காமம் – கட்டகமுவ பகுதிக்கு அருகில் காட்டுப்பகுதியில் இடம்பெற்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த காட்டுகப்பகுதியில் இறைச்சிக்காக விலங்குகள் வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் அங்கு சென்ற வன ஜீவராசி அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் வேட்டையாடுபவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர்களினதால் வேட்டையடப்பட்ட இரு மான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.