தினமும் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களும் பல விதமான பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து பார்ப்போம்.
உடல் தோற்றம் சீரற்று போகும், உடல் வலி அதிகரிக்கும், இதயக் கோளாறுகள் ஏற்படும், மூளை பாதிப்படையும், உடல் எடை அதிகரிக்கும், நீரிழிவு நோய் வரலாம், வெரிகோஸ் நோய் அதிகரிக்கும் (நரம்பு சுருக்க நோய்), மனக் கவலை அதிகரிக்கும், தூக்கமின்மை அதிகரிக்கும்.
தடுப்பது எப்படி:
பொதுவாக இதனால் ஏற்படும் பாதிப்புகளை நம்முடைய வாழ்க்கை முறைய மாற்றுவதன் மூலமே தடுக்க முடியும். அதிகாலை எழுந்து குறைந்தது 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி அல்லது மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், குறிப்பாக கீரை வகைகள், பழங்கள், சிறுதானியங்களை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பு, அதிக சர்க்கரை அளவு போன்ற நோய்களை தடுக்கலாம். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருக்கும் பணியை செய்பவராக இருந்தால் ஒரு மணிநேரத்திற்கு குறைந்தது 10 நிமிடங்களாவது எழுந்து நிற்பது, முடிந்தால் நடப்பதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.
நாம் நம்முடைய வேலைகளை பாரம்பரிய முறையில் தினமும் செய்யாததன் விளைவே இது போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாக அமைகின்றது. எனவே நம்முடைய அன்றாட வேலைகளை முடிந்த அளவு நாமே செய்து இது போன்ற பாதிப்புகளிலிருந்து மீள்வோம்.