நம்முடைய கல்லீரலை பாகற்காய் இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒழுங்குபடுத்தும் இயல்பு, பாகற்காயின் தனிச்சிறப்பாகும்.
நம்முடைய கல்லீரலை அது இயற்கையான முறையில் சுத்தப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
பாகற்காயை கொண்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகை பானம் ஆகும்.
பாகற்காய் டீ
- உலர்ந்த பாகற்காயை சீவி, அந்த துண்டுகளை நீரில் போட்டு தயாரிக்கப்படும் பாகற்காய் டீ, மருத்துவ குணம் கொண்டதென கூறி விற்கப்படுகிறது.
- பாகற்காய் டீ தயாரிப்பதற்கான பொடி அல்லது சாறு இப்போது கடைகளிலும் கிடைக்கிறது.
- பாகற்காய் சாற்றினை போல் அல்லாமல் பாகல் இலை, காய் அல்லது விதை எதைக்கொண்டு வேண்டுமானாலும் பாகல் டீயை தயாரித்துக் கொள்ள முடியும்.
எப்படி தயாரிப்பது?
மிக எளிய முறையில் வீட்டிலேயே பாகற்காய் டீ போட்டுக்கொள்ளலாம். பாகற்காயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கி அதை நன்கு உலர வைத்து அல்லது பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான நீர் மற்றும் இயற்கை சுவையூட்டியாக தேன் அல்லது அகாவ் என்னும் நீல கற்றாழை சாறும் தேவை. காய வைத்த பாகல் இலைகளை கொண்டு டீ தயாரிக்கலாம். ஆனால், பாகற்காய் எளிதாக கிடைக்கக்கூடியது. ஆகவே, காயை பயன்படுத்தலாம்.
தயாரிக்கும் முறை
பாத்திரம் ஒன்றில் நீரை கொதிக்க வைக்கவும்.
உலர்ந்த பாகற்காய் சீவல்களை நீரினுள் போட்டு பத்து நிமிடத்திற்கு கொதிக்க விட வேண்டும்.
இளஞ்சூடாகவும் வைக்கலாம். இப்படிச் செய்வதால் பாகற்காயிலுள்ள சத்துக்கள் நீரினுள் இறங்கும்.
அடுப்பை விட்டு பாத்திரத்தை இறக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு வடிகட்டி இன்னொரு பாத்திரத்தில் அல்லது கப்களில் எடுத்துக்கொள்ளவும்.
தேன் அல்லது அதுபோன்ற இயற்கை இனிப்பூட்டியை இனிப்புக்காகவும் நறுமணத்துக்காகவும் சேர்க்கவும்.
பெரும்பாலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவே பாகற்காய் டீ பருகுவதால், இனிப்புக்காக எதையும் சேர்க்காமல் இருப்பது கூடுதல் நன்மை தரும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த டீ எதிர்மறை விளைவுகளை தரக்கூடும். ஆகவே, உங்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு குடிப்பது நல்லது.