யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (11) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பலரும் கொரோனாத் தாக்கத்துக்கு இலக்காகி வருகின்றனர்.
அதேநேரம் கொழும்பில் உள்நாட்டவர்கள் நோய்த்தாக்கத்துக்கு இலக்காகுவதால் அங்குள்ள வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளர்களினால் நிரம்பியுள்ளது.
கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களுக்கும் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் 50 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஓர் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்தியத் தொழிலாளர்களும் கொரோனா நோய்த் தாக்கத்துக்கு இலக்கான நிலையில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.