சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் சில பகுதிகளில் தற்பொழுது தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இந்த பகுதிகளில் மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை மீள அமுல்படுத்தும் எவ்வித உத்தேசமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.