ஹைப்பர் டென்சன் என்பது உலகெங்கிலும் உள்ள பலரை பாதிக்கும் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பிரச்சனை இதய நோய் மற்றும் கடுமையான நிகழ்வுகளில் பக்கவாதம் போன்ற பிற இதய நோய்களுக்கும் வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தத்தை சில உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் நிர்வகிக்க முடியும்.
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு என்று பல்வேறு சமையல் குறிப்புகள் மற்றும் நிபுணர் உதவிக் குறிப்புக்கள் உள்ளன. அதில் பலரும் பரிந்துரைக்கும் முக்கியமான விஷயம் உப்பு மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது தான். நிபுணர்களின் கூற்றுப்படி, ஓம நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது இரத்த அழுத்த அளவில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளில் மாயங்களை ஏற்படுத்தலாம்.
ஓமம்
இந்திய மசாலா பொருட்கள் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டவை மற்றும் இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதோடு, நோயை எதிர்த்துப் போராடும் வலிமையையும் வழங்கும். பழங்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண மசாலா பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் ஒரு அற்புதமான மசாலாப் பொருள் தான் ஓமம். இந்த ஓமத்தில் நல்ல மணத்தையும், சுவையையும் வழங்கும் தைமோல் உள்ளது. இந்த தைமோல் எடை இழப்பு, ஆரோக்கியமான செரிமானம் மற்றும் ஆரோக்கியமான இதயம் போன்ற பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்க வல்லது.
ஏன் உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓமம் நல்லது?
ஓமத்தில் ஆன்டி-ஹைப்பர்டென்சிவ் மற்றும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் இருப்பதாக அறியப்படுகிறது. அன்றாட உணவில் ஓமத்தை சேர்த்து வருவது உயர் இரத்த அழுத்தத்தில் மாயங்கள் நிகழலாம் என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஓமம்தை அப்படியே சாப்பிட சற்று கடுமையானதாக இருந்தால், அதை நீரில் ஊற வைத்து நீருடன் சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஓம நீரைத் தயாரிப்பது எப்படி?
ஓம நீர் தயாரிப்பது மிகவும் ஈஸி மற்றும் எளிமையான செயல்முறையும் கூட. அதற்கு தேவையானது ஓமம் மற்றும் தண்ணீர் தான்.
* இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஓம விதைகடிள ஒரு கப் நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அந்நீரை அப்படியே கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வெறும் வயிற்றில் அந்நீரைக் குடிக்க வேண்டும்.
இப்படி தினமும் குடித்து வந்தால், உங்கள் உடலில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். இப்போது ஓம விதைகளின் பிற நன்மைகளைக் காண்போம்.
அஜீரண பிரச்சனை நீங்கும்
ஓம விதைகளின் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளுள் ஒன்று, இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். நீங்கள் அஜீரண பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்பட்டு வருபவராயின், சிறிது ஓமத்தையோ அல்லது ஓம நீரையோ தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் ஓமத்தில் உள்ள செயல்பாட்டில் இருக்கும் நொதிகள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி புரிந்து, செரிமான பிரச்சனைகளைப் போக்கும்.
சளிக்கு நல்லது
ஓமம் அதிகப்படியான சளித் தேக்கத்தால் ஏற்படும் மூக்கடைப்பைத் தடுக்க உதவும். அதற்கு ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரில் சிறிது வெல்லத்தையும் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
காது மற்றும் பல் வலி
காது வலியால் கஷ்டப்படும் போது, 2 துளிகள் ஓம எண்ணெயை விட காது வலி சட்டென மறையும். பல்வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஓமம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி கொப்பளிப்பதால் பல் வலி நீங்குவதோடு மட்டுமின்றி, சிறந்த மௌத் வாஷ்ஷாக செயல்படும் மற்றும் வாயின் ஆரோக்கியமும் மேம்படும்.
ஆர்த்ரிடிஸ் வலி நீங்கும்
ஓம விதைகளுக்கு ஆர்த்ரிடிஸை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது. இதில் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளதால், இது மூட்டுக்களில் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும். மேலும் ஓமத்தில் வலி மற்றும் வீக்கத்தை ஆற்றும் மயக்க பண்புகள் உள்ளன. அதற்கு ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவலாம் அல்லது ஒரு வாளி சுடுநீரில் ஒரு கையளவு ஓம விதைகளைப் போட்டு, அந்நீரில் வலியுள்ள மூட்டு பகுதியை ஊற வைக்கலாம்.