முடிவடைந்த கடந்த 24 மணி நேர காலத்தில் தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய 20 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசத்தை அணியாமல் இருந்தமை ஆகிய காரணங்கள் சம்பந்தமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும், ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சுகாதாரப்பிரிவினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


















