யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை திங்கட்கிழமை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு மகப்போற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவும் மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டு நாளை முதல் இயங்கவுள்ளதாக சி.யமுனாநந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடையம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எவ்வித தடங்கலுமின்றி செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வெளி நோயோளர் பிரிவில் சிகிச்சைபெற நேயாளர்கள் வந்தவண்னம் உள்ளார்கள்.
மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரனமாக சமுக இடைவெளியினை பேனும் வகையில் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தனிப்பட் பிரிவில் இயங்கி வந்த மகப்போற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவானது மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றப்பட்டு நாளை முதல் இயங்கவுள்ளது.
மேலும் இருதய சிகிச்சைக்குரிய கிளினிக்குகளானது விக்ரோரியா வீதியில் உள்ள கிளிக் கொம்பக்சில் நாளைமுதல் நடைபெறவுள்ளது.
எனவே நோயாளிகள் அங்கு நேரே வந்து வைத்திய ஆலோசனைகளைப் பெற்று மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.இதன் மூலம் நோயாளர்களின் நெருக்கத்தினை குறைத்துக்கொள்ள முடியும் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.