முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியமையினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.
குறித்த கிணறு அழமைந்துள்ள பகுதியை சூழவுள்ள நிலப்பகுதியில் ஏதேனும் இரசாயனக்கழிவுகள் அல்லது ஏதேனும் வேறு கழிவுகள் தரைக்கீழ் நீருடன் கலந்திருக்கலாம் எனவும், சூழவுள்ள ஒரு கிலோமீற்றர் பகுதிக்குட்பட்ட நிலத்தினுடைய மேற்பரப்பிலிருந்து கழிவுகள் ஊடுவடிந்திருக்கலாம், எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, கழிவுநீர் கசிதல், கழிப்பிடங்கள், ஊறித்தோயும் குழிகள் முதலியவற்றிலிருந்து ஏற்படும் நிலத்தடிகசிவினால் கிணற்று நீர் மாசு அடையலாம்.