நாட்டில் நேற்று (21) அடையாளம் காணப்பட்ட 491 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து மொத்தம் 6,898 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் இருந்து 292 பேர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 87 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 17 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 11பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 7 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 5 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 3 பேர், அனுராதபுரம், புத்தளம், பதுளை, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய 4 பேர் மற்றும் இதர 60 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.