இத்தாலியில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பவியா நகரத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் விஷ வாயு கசிந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக கெரிபினெரி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
ஜோசப் எவன்ஸ் பெர்னாண்டோ என்ற 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டினை சூடாக வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படும் மின்சார உபகரணத்தினால் வெளியேறிய வாயுவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டில் உயிரிழந்த நபருடன் மனைவி இருந்துள்ளார். அவர் விஷ வாயுவை சுவாசித்ததன் காரணமாக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள நபர் வழங்கிய தகவலுக்கமைய 16ஆம் திகதி மீட்பு குழுவினர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். எனினும் இலங்கையர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் வென்னப்புவ லுனவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.