கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிதவித்த 188 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் தோஹா ஆகிய நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 50 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில், கட்டாரிலிருந்து 48 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், இன்று அதிகாலை 5.25 மணியளவில் தோஹாவிலிருந்து 90 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதன்படி ,இவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.