உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் ஒருமுறை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சாட்சியப் பதிவுக்காகவே அவர் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றும் அதற்கு முன்னதாக பல தடவைகள் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


















