வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெறுள்ள குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கண்டனத்தை வெளியிடடுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அத்தோடு அண்மையில் கார்த்திகை விளக்கீட்டுத் தினத்தன்று கிளிநொச்சி பரந்தனில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் தனத அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


















