பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த லொஸ்லியா மற்றும் கவின் காதல் குறித்து எந்த தகவலும் முழுமையாக வெளியாக வில்லை.
இந்நிலையில் இருவரின் காதலும் உண்மையா என்பது குறித்த தகவல்களை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் லொஸ்லியாவை உண்மையிலேயே காதலிப்பது போல் நடந்து கொண்டுள்ளார்.
கவினை லாஸ்லியா காதலிக்காத போதும் அவரை நம்பி, அவருடன் பழகினாராம் லொஸ்லியா.
ஆனால் கவினோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்கவும், அதன் மூலம் பெரும் பிரபலமாகவும் தான் லாஸ்லியாவை காதலிப்பது போல் நடித்ததாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் லொஸ்லியாவுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, லொஸ்லியாவின் அழகு கலை நிபுணராக பணியாற்றிய பெண் ஒருவருடன் கவினுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவினுடைய காதல் உண்மை என்று நம்பிய லாஸ்லியாவுக்கு, கவின் தன்னுடனான தொடர்பை துண்டித்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.