உயர் பிரமுகர்களின் மெய்ப்பாதுகாவலர்களான 44 பொலிசார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 264 விசேட அதிரடிப்படையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் துறையில் இதுவரை 1277 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலுமுள்ள 85 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிசார் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கோட்டை- 162, பொரளை- 107, கொழும்பு குற்றப்பிரிவு- 68, கெசல்வத்த- 76, கிராண்ட்பாஸ்-39, மருதானை- 23, புறக்கோட்டை- 20, சி.ஐ.டி- 15,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு- 12, பேராதனை- 8, அமைச்சர் பாதுகாப்பு பிரிவு- 09,
பொலிஸ் களப்படை தலைமையகம்- 23, சினமன் கார்டன்- 31 பேர்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1277 பொலிசாரில், 925 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 352 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.