நமது மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒரு எண்ணம் முருங்கைக்காய் ஒரு ஆரோக்கியமான உணவு என்பது.
இது உண்மைதான் ஆனால் இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை.
இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
- முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான்.
- அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது.
- இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
- முருங்கைக்காய் என்னதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது.
- ஏனெனில் இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.
- ஹைப்போடென்ஷன் என்பது இரத்த அழுத்தத்தை மிக அதிகளவில் உயர்த்தும் ஒரு குறைபாடு ஆகும்.
- இதனால் உலகம் முழுவதும் பலரும் பாதிக்கப்ட்டுள்ளனர். ஹைப்போடென்ஷன் இதய ஆரோக்கியத்தை பாதித்து மாரடைப்பு வரை கூட ஏற்படுத்தும். முருங்கைக்காய் ஹைப்போடென்ஷன் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
- ஆனால் இதில் உள்ள பாதிப்பு என்னவென்றால் மிக அதிக அளவில் குறைக்கும். அதனால் மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
- கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும்.
- மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.