யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மாவட்டத்தில் புரவி புயல் காரணமாக நேற்று இரவு ஏழு மணி வரையான தகவல்களின்படி 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 163 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மாவட்டத்தில் 36 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு 941 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 393 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் 55 வீடுகள் முழுமையாகவும் 2443 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன இந்நிலையில் நேற்று இரவு தொடக்கம் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து உள்ள நிலையில்
மீண்டும் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக யாழ். நகரம் உட்பட தாழ்நிலப் பகுதிகளில் மீண்டும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடித்து வரும் நிலையில் பாதிப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது.