தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
2ஆம் தேதி அறிவாலயம் சென்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, 3ஆம் தேதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.