களுத்துறை – அட்டுளுகம பகுதியில் கடமையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்.
அட்டுளுகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் சுகாதார ஆலோசனையைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
இதற்கிடையில், காலி நகராட்சி பகுதியில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது அதன்படி கொரோனா தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



















