அரசாங்கத்தின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குவதன் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் துமிந்த திசானநாயக்க தெரிவித்தார்.
மன்னார் மின் உற்பத்தி நிலையம் மூலம் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைக்கலாமென தெரிவித்தார். அத்துடன், காற்றாலை மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ .10 க்கும் குறைவான செலவில் உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பூநகரியில் 240 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுமென்றும் தெரிவித்தார்.


















