கேகாலையில் இன்று 500 பேருக்கு கொரோனா பானம் வழங்கினார் பாரம்பரிய வைத்தியர் தம்மிக பண்டார.
அவர் இன்று கொரோனா மருந்து வழங்குவார் என்ற தகவல் பரவியதும், வெளியிடங்களில் இருந்தும் அவரது வீட்டை நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். தொலைதூரத்தில் இருப்பவர்கள் நேற்று இரவே அங்கு வந்து வீதிகளில் படுத்திருந்துள்ளனர்.
இன்று மக்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து, ஒலிபெருக்கி மூலம் வைத்தியர் மக்களுடன் உரையாற்றினார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் மருந்தை பெற வந்திருந்தனர். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் மருந்தை பெற வருமாறும், ஒரு போத்தல் மருந்தை நான்கு பேர் பருகலாம் என்றும் ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் மருந்தை அருந்தக் கூடாதென்றும், போதைப்பொருள் பாவனையை கைவிட்ட பின்னரே மருந்தை அருந்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.


















