அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும் அதிக வேலைப் பளு, தூக்கமின்மை, டென்சன், சரியான சரும பராமரிப்பு இல்லாமை முகம் பிரகாசமின்றி போய்விடும்.
அதிலும் மற்ற நேரங்களில் அழகாக காணப்பட்டாலும், ஏதேனும் விழாக்கள் என்றால் அப்போது தான் முகம் பொலிவின்றி காணப்படும்.
இதனை போக்க அழகு நிலையங்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு எளியமுறையில் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.
மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும்.
முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ள
- வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம். உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
- பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
- வேப்பிலையையும், வெள்ளரியையும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ்-ஐ தனியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.
- தக்காளி சாற்றினை தினமும் முகத்தில் தடவி, மசாஜ் செய்து, உலரவைத்து கழுவி வந்தால் சருமம் பொலிவோடு இருக்கும்.
- கசகசாவை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து, அடிக்கடி தடவி வந்தால், சில தினங்களில் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி, சருமம் இயற்கை நிறம் பெறும்.
- குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்பட்டால், வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின்மீது பூசி வர மறையலாம்.
- கை, கால், முகம், கழுத்துப் பகுதிகள் வறண்டு இருந்தால், சிறிது கடலைமாவு, மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து, இந்தப் பகுதிகளில் பூசுங்கள். கால் மணிநேரம் கழித்து சோப் போடாமல், வெறும் தண்ணீரால் கழுவுங்கள். வறண்ட தோல் பளபளப்பாகும்.



















