பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு சேவையின் தலைவராகவும் செயற்பட்ட ஜனத் அல்விஸ், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பான நாட்டையும் ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள, சட்டபூர்வமான சமூகத்தையும் உருவாக்குவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார்.
நவம்பர் மாதம் (22) புதிதாக நிறுவப்பட்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜகத் அல்விஸ் பணியாற்றுவார்.
இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நவம்பர் 26 அன்று பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.
அரசின் முக்கிய பதவிகளில் இராணுவ பின்னணியுடையவர்கள் நியமிக்கப்பட்டு வருவது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


















