நடிகை சித்ரா மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சித்ரா நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஹோட்டல் அறையில் சித்ரா உடன் திருமணம் நிச்சயப்பட்ட ஹேமந்தும் தங்கியிருந்தார்.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.
மேலும் சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என உறுதியாகி உள்ளது.
அத்துடன் அவரது கன்னத்தில் காணப்பட்ட நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
அவருடன் ஹோட்டல் அறையில் இருந்த ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.



















