கண்டி வெலம்பட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன் காரணமாக அந்த மருத்துவருக்கு சொந்தமான இரண்டு தனியார் சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன் மருத்துவருக்கு நெருக்கமான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கடந்த 9 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது.


















