பிரதமர் மஹிந்த ராஜபக்ச, மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய அல்லது பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய அதிகாரிகள் அண்மையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து பார்க்குமாறு பிரதமர் மஹிந்த பணிப்புரை விடுத்துள்ளார்.



















