வீடொன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்க்கச் சென்ற பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நீர்கொழும்பு – கட்டானை பகுதியிலே இடம்பெறுள்ளது.
சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹரிச்சந்திரபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட முரண்பாட்டை சமாதானம் செய்வதற்காக சென்ற பெண் திடீரென்று கீழே விழுந்துள்ளார்.
இதன்போது காயமடைந்த குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஹரிச்சந்திரபுர பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.