பொலன்னறுவை நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை விஷ போதைப்பொருள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 12 கிராம் ஹெரோயின் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அவை 80 சிறிய பெக்கெட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
36 வயதுடைய குறித்த சந்தேகநபர் மோட்டார் வாகனத்தில் குறித்த ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைதான சந்தேகநபரின் வீடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.



















