கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 108 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வந்தடைந்தனர்.
அதன்படி கட்டாரிலிருந்து 83 பேர், அபுதாபியிலிருந்து 13 பேர், மாலைதீவிலிருந்து 12 பேர் நாட்டை வந்தடைந்தனர் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், உக்ரைனிலிருந்து 160 பேர், துருக்கியிலிலிருந்து 04 பேர், இந்தோனேசியாவிலிருந்து 03 பேர், டுபாயில் இருந்து 22 பேர் இன்று இந்நாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















