இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மிக ஆபத்தான வகையில், தற்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது எனவும், லண்டன் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு முழுவதும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அங்கு கொரோனா நோயாளிகளை தவிர்த்து, மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, இங்கிலாந்தில் 53,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வைரஸ் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டின் பல பகுதிகளில் 4 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய புதிய வகை அதிதீவிர கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் இரண்டாவது தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.