புத்தளம் மாவட்டம் முத்துபந்திய தீவிலுள்ள வீடுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளன.
சுமார் மூன்றடி உயரமான கடல் நீர் தீடீரென கரை புகுந்ததாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
தீவின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கல் வேலியில் இருந்த கற்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
கடல் அலையுடன் வந்த குப்பைகள் வீடுகளுக்கு அருகில் குவிந்து கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுனாமி ஏற்பட்ட போது கூட இந்தளவு கடல் நீர் தீவுக்குள் வரவில்லையென அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் கூட இந்தளவு பாரிய அலைகள் ஏற்படுமென முன்கூட்டிய அறிவித்திருக்கவில்லையெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை முத்துபந்திய தீவைச் சுற்றி நீண்டகாலமாக ஏற்படும் கடலரிப்பு காரணமாக இந்த தீவு அழிந்து போகும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.