உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 84,356,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 1,834,519 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 59,625,641 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசில், இங்கிலாந்தில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. தற்போது படி படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மீண்டும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசால் இதுவரை 25-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உருமாறிய கொரோனா வைரசால் இங்கிலாந்தில் இரண்டாவது நாளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாததே தொற்று பரவலுக்கு காரணம் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



















