வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை – பாணம பிரதேசவாசிகளால் நேற்றிரவு பாணம வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த தாக்குதலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி பாணம – குடும்பிகலயில் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி 56 வயதான நபரொருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரதேச வாசிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வனஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதமேற்படுத்திய 5 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களை இன்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















