யாழ்ப்பாணத்தில் இன்று (4) மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மருதனார்தடம் சந்தை கொரோனா உப கொத்தணியுடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மட உப கொத்தணியில் இதுவரை 143 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.