உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டததரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை இன்றுநீதிமன்றத்தில் ஆஜர் செய்யாத சிஐடியினர் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இன்று இரண்டுமணிக்கு சட்டத்தரணி ஹிஸ்புல்லாவை ஆஜர் செய்வதாக சிஐடியினர் அவரது மனைவிக்கும் நீதிமன்றத்திற்கும் சட்டத்தரணிகளுக்கும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் 3 மணியளவில் ஹிஜ்புல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய முடியாத நிலை காணப்படுவதாக நீதிமன்ற பணியாளர்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெஜாஸ் ஹில்புல்லா கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட நபருடன் தொலைபேசியில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.



















