நாம் அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்த்து கொண்டால் சிறுநீரக கற்கள் கரையும். அதுமட்டுமல்லாது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மேலிம், வாழைத்தண்டு விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை.
வெட்டி எறியப்படும் வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர்கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.
சிறுநீரக பாதையில் எரிச்சல், நோய் தொற்று, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதற்கு வாழைத்தண்டு மட்டுமே சிறந்த மருந்தாக இருந்து அந்தக் கல்லை கரைக்க செய்கிறது.
சிறுநீரை பெருக்க செய்வதோடு நீர் சுளுக்கால் அவதியுறுபவர்களுக்கு கை கண்ட பக்க விளைவு இல்லாத உடனடி நிவாரணமாக வாழைத்தண்டு இருக்கிறது.