யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் இராணுவம், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் என நூற்றுக்கணக்கானவர்கள் குவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு இராணுவக் கோட்டை போல காட்சியளிக்கிறது.பேருந்துகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டபடியிருக்கிறார்கள்.
பல்கலைகழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களிற்கான நினைவுத்தூபியை உடைப்பதென- தமிழ்மக்களின் உணர்வுகளை சிதைக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்ததாக கூறும் முடிவிற்கு எதிராக, பல்கலைகழக மாணவர்கள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உடைக்கப்பட்ட தூபியை மீண்டும் இன்று அமைத்தே தீருவோம் என மாணவர்கள் சபதமேற்றுள்ள நிலையில், பல்கலைகழகத்திற்குள் நுற்றிற்கும் அதிகமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதுதவிர, இராணுவம், அதிரடிப்படை, புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


















