இந்தியப்பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்க் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசியை பெறுவது தொடர்பில் தான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அம்பாறை உகண பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட் தடுப்பூசி தயாரானதும் எமது நாட்டுக்கும் அதனை வழங்குமாறு நான் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன்.
எனது கடிதத்திற்கு இரண்டு தலைவர்களும் செவிசாய்த்துள்ளனர். அவர்கள் தடுப்பூசியை இலவசமாக வழங்க தயாராக உள்ளனர்.அதேபோன்று மற்றுமொரு தடுப்பூசியை நாம் கொள்வனவு செய்யவேண்டும்.
அத்துடன் ரஷ்யா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து தடுப்பூசியை பெற அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



















