டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனினும் இந்த இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் முறையாக பதிவு செய்து, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.
முதல் டோஸ் தடுப்பூசியானது டுபாய் நகரில் வசித்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், முக்கிய பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாட்பட்ட வியாதியுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
டுபாய் நகரில் அல் சபா, ஜபில், அல் மிசர், நாத் அல் ஹமர், அல் பர்சா மற்றும் அப்டவுண் மிர்திப் ஆகிய இடங்களில் செயற்பட்டுவரும் ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஹத்தா மருத்துவமனையிலும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை போட வருபவர்கள் டுபாய் சுகாதார ஆணையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.