கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகமே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மாணவர்களின் பாடசாலை வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.
பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் மாணவர்களை சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை உரிய முறையில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.